ரூ.41 கோடியில் பிரம்மாண்ட மாளிகை; சடலமாக கிடந்த இந்திய குடும்பம் - அமெரிக்காவில் அதிர்ச்சி!!
அமெரிக்காவில் உள்ள மாளிகையில், இந்திய வம்சாவளி தம்பதியினர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்பு
அமெரிக்காவின் டோவர் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தம்பதியினர் ராகேஷ் கமல் (57) - டீனா (54). இவர்களுக்கு அரியானா (18 ) என்ற மகள் இருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு இவர்கள், EduNova என்ற கல்வி அமைப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தனர். மேலும், அதே ஆண்டில் 11 படுக்கையறைகளுடன் 19 ஆயிரம் சதுர அடி பரப்பில், ரூ.41 கோடி மதிப்பில் ஒரு மாளிகையை இந்த தம்பதியினர் வாங்கியிருந்தனர்.
இதற்கிடையில், கடந்த டிசம்பர் 2021ம் ஆண்டு அந்த நிறுவனம் திவால் ஆவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் மூவரும் அவர்கள் வசித்து வந்த மாளிகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பேசிய காவல்துறை "கடந்த 2 நாள்களாக இந்தக் குடும்பம் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. எந்த அழைப்புகளையும் ஏற்கவில்லை.
கடன் தொல்லையா..?
உடனே அவர்களின் உறவினர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தம்பதி சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு நிதி சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரியவருகிறது.
[OSSGCU[
இந்தச் சூழலில் குடும்ப வன்முறை காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக வழக்கறிஞர் மோரிஸ்ஸி என்பவர் கூறியதாவது"`காவல்துறை சொல்வதுபோல குடும்ப வன்முறையாக இருக்க வாய்ப்புகள் குறைவு.
இதற்கு முன்பு இங்கே சண்டை, அடிதடி என எந்தவொரு புகாரும் வந்ததே இல்லை. தற்போது கிடைத்துள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, யாரும் வெளியே இருந்து வந்து தாக்கியதாக தெரியவில்லை" என்றார். எனவே கடன் தொல்லையால் இந்த தம்பதியினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.