எக்ஸ்பிரஸ் ரயில்.. ஸ்லீப்பர் சீட்டில் சில்மிஷம், எல்லைமீறிய காதல் ஜோடி - கடுப்பான பயணிகள்!
ரயிலில் காதல் ஜோடி செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடி
பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நெல்லை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்பொழுது நாகர்கோவிலுக்கு வருவதற்காக பயணிகள் பலர் ரயிலில் ஏறினர்.
அதில் எஸ்-1 பெட்டியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒரு வரும் பயணம் செய்தனர். நெல்லை வரை இருவரும் ஒரே மேலடுக்கு படுக்கையில் இருந்தனர். பின்னர், அந்த பெட்டியில் ஆட்கள் இல்லாத இருக்கைக்கு சென்றனர். அதன்பிறகு இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து சில்மிஷத்தை தொடங்கினர்.
இரவானாலே பாலியல் டார்ச்சர் செய்யும் கணவர்.. ஆத்திரத்தில் அந்த உறுப்பில் மிதித்தே கொன்ற மனைவி - கொடூரம்!
கண்டித்த பயணிகள்
தொடர்ந்து, நேரம் செல்ல செல்ல இருவரும் எல்லைமீற தொடங்கினர். இருவரும் முத்தம் கொடுப்பது மற்றும் கட்டி அணைப்பது போன்ற விஷயங்களை செய்தனர். பின்னர், அங்கு பயணிகள் இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் எல்லைமீறினர். இவர்களின் இந்த செயல் அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் முகம் சுளிக்க வைத்து, பிறகு பலர் அவர்களை கண்டித்தனர்.
அதனால் அந்த ஜோடி முகத்தை மறைந்தபடி அமர்ந்து கொண்டது. இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோதே நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ரயிலை விட்டு இறங்கியதும் இருவரும் ஓட்டம் பிடித்தனர்.
மேலும், இந்த காதல் ஜோடி பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. பின்னர், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று சக பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.