ஹோட்டலில் தங்கிய காதல் ஜோடி.. கதவை திறந்து அதிர்ந்த நிர்வாகம் - என்ன நடந்தது?
காதல் ஜோடி 4 மணிநேரத்திற்கு ரூம் போட்டு செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டலில் ரூம்
டெல்லி மவுஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு நேரத்தில் வந்த காதல்ஜோடி வெறும் 4 மணிநேரத்திற்கு மட்டும் ரூம் போட்டுள்ளனர். ரூமுக்குள் சென்ற ஜோடி வெளியே வரவில்லை, நீண்ட நேரம் ஆகியும் வராததால் ஓட்டல் ஊழியர் கதவை தட்டியுள்ளார்.
அப்பொழுது கதவு திறக்கவில்லை, இதனால் ஜாஃப்ராபாத் போலீசுக்கு தகவல் தந்தார்கள். போலீசாரும் விரைந்து வந்து, ஹோட்டலில் உள்ள ஸ்பேர் சாவி மூலம், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று அதிர்ச்சி அடைந்தனர்.
கள்ளக்காதல்
இந்நிலையில், உள்ளே பார்த்தபொழுது அங்கு அந்த ஜோடி சடலமாக கிடந்துள்ளார். அந்த நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. அந்த பெண், படுக்கையிலேயே சடலமாக கிடந்தார். அவர்கள் அருகில் ஒரு லெட்டர் இருந்தது, அதில் "நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், வாழ்க்கையில் ஒன்று சேர முடியவில்லை. அதனால், மரணத்தில் ஒன்று சேர்கிறோம்" என்று எழுதியுள்ளனர்.
விசாரணையில், இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள், உயிரிழந்த அந்த நபரின் பெயர் சோராப் (28 வயது) அந்த பெண்ணின் பெயர் ஆயிஷா, 27 வயதான இவருக்கு முகமது குல்பாம் என்பவருடன் கல்யாணமாகி, 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இருவரும் நீண்ட காலமாகவே கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலையில் தற்கொலை செய்துகொண்டனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.