1000 அடி உயரத்தில் இருந்து தள்ளிவிட்டு மனைவி கொலை.. கணவர் போட்ட நாடகம் - அதிர்ச்சி!

Attempted Murder Death
By Vinothini Oct 27, 2023 11:06 AM GMT
Report

 மனைவியை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை, காணவில்லை என்றும் யாரும் புகைரளிக்கவில்லை.

husband-killed-his-wife-in-vandavasi

இவரது புகைப்படத்தை வைத்து தேடினர், அதே சமயம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஜெயராமன், மனைவியை காணவில்லை என்று புகாரளித்தார். போலீசார் சடலமாக கிடந்த அந்த பெண்ணின் புகைப்படத்தையும் இவர் அளித்த படத்தையும் வைத்து கண்டுபிடித்தனர்.

தமிழக காவலரை கட்டையால் அடித்து தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் - பரபரப்பு!

தமிழக காவலரை கட்டையால் அடித்து தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் - பரபரப்பு!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், போலீஸார் சடலமான பெண் நித்தியாவின் தாய் சாந்தி தொலைபேசியை ஜெயராமனுடன் பேச வைத்து அழைத்தனர். அவரை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். நித்யாவுக்கும் சீர்காழியில் வசித்து வந்த ஜெயராமனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

arrested

இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது, இதனால் நித்தியா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவாராம். இதுபோல வீட்டை விட்டு வெளியே சென்றவர், ஜெயராமனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வந்தவாசியில் இருக்கிறேன். என்னை வந்து அழைத்து செல்லுமாறு நித்யா கூறினார்.

இதையடுத்து ஜெயராமன் வந்தவாசிக்கு வந்ததும், நித்தியா அவரை அழைத்துக் கொண்டு தவளகிரி மலை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஜெயராமன் நித்யாவை 1000 அடி உச்சயில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.