கள்ளக்குறிச்சி கலவரம்; பள்ளி தலைமையாசிரியர் அறையில் காண்டம் பாக்கெட்டுகள் - அதிர்ச்சி வீடியோ..!
கள்ளக்குறிச்சி மாணவி பயின்ற தனியார் பள்ளி தலைமையாசிரியர் அறையில் காண்டம் பாக்கெட்டுகள் இருந்ததாக வீடியோ ஒன்றை செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
கலவரமாக மாறிய போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை கண்டித்து நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.
தலைமையாசிரியர் அறையில் காண்டம் பாக்கெட்டுகள்
மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர். பேருந்துகள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் பள்ளி தலைமையாசிரியர் அறையில் நுழைத்து பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அப்போது அவரின் அறையில் காண்டம் பாக்கெட்டுகள் இருந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
This video claimed Lots of condom pockets found in Principle Room.#justiceforsrimathi#Srimathi #ஸ்ரீமதிக்கு_நீதி_வேண்டும் https://t.co/tt2U3WU1sH
— Siraj Noorani (@sirajnoorani) July 17, 2022