அரசு பேருந்தில் அத்துமீறிய இளம்ஜோடி - வீடியோ வைரலானதால் பரபரப்பு
அரசு ஏசி பேருந்தில் இளம்ஜோடி அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்ஜோடி அத்துமீறல்
மும்பையை அடுத்து நவி மும்பையில் மாநகாரட்சி சார்பில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பன்வெலில் இருந்து கல்யாண் நகர் நோக்கி மாநகராட்சி ஏசி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தில் குறைந்த பயணிகளே இருந்துள்ளனர். அதில் 20 வயது மதிக்கத்தக்க இளம்ஜோடி ஒன்றும் பயணித்துள்ளது. இருவரும் பொது வாகனம் என்றும் பாராமல் அத்துமீறி உறவில் ஈடுபட்டுள்ளனர்.
நடத்துனருக்கு சிக்கல்
இதனை நடத்துனரும் கண்டுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால், பக்கவாட்டில் நெருங்கி சென்று கொண்டு இருந்த மற்றொரு பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று பணியில் இருந்த நடத்துனர், ஓட்டுநரை மாநகராட்சி அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த மோசமான நடத்தையை தடுக்க தவறியதாக நடத்துனரிடம் விளக்கம் கேட்டு, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.