2 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தாய் விபரீத முடிவு - பதறவைக்கும் சம்பவம்
2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார்.
குடும்ப விவகாரம்
தெலங்கானா, கஜுலராமரம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு தேஜா(35) என்ற பெண், அவரது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.
தனக்கும், தனது குழந்தைகளுக்கும் கண் தொடர்பான பிரச்சினை இருப்பதால் அதை சொல்லிக் காட்டி அடிக்கடி கணவர் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தில் கடன் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது.
தாய் கொடூரம்
இந்நிலையில், தனது மூத்த மகனான அர்ஷித் ரெட்டி மற்றும் இளைய மகனான ஆஷிஷ் ரெட்டி ஆகியோரை இளநீர் வெட்ட பயன்படுத்தும் கொடூர வாளால் கழுத்தை அறுத்து தேஜா படுகொலை செய்துள்ளார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை,
கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆகியவற்றின் காரணமாக தேஜா இந்த முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.