மகனுக்கு பதிலாக தந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை - மிரளவைக்கும் சம்பவம்
மகனுடன் வந்த தந்தைக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறான ஆப்ரேஷன்
ராஜஸ்தானில் கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு விபத்தில் படுகாயமடைந்த மணீஷ் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இவருக்கு உதவியாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசமுடியாத தந்தை ஜகதீஷ் பஞ்சால்லை இருந்துள்ளார்.
மருத்துவமனை விளக்கம்
இந்நிலையில், வெளியே தனது தந்தையை அமர வைத்துவிட்டு மணீஷ் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றுள்ளார். தொடர்ந்து சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்த போது அவரது தந்தைக்கு கைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஜெகதீஷ் என்ற வேறொரு நோயாளியை அறுவைசிகிச்சை அரங்கிற்குள் அழைத்த போது, மணீஷின் தந்தை தவறுதலாக சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இதுகுறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாகவும், 3 நாட்களுக்குள் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் சங்கீதா சக்சேனா தெரிவித்துள்ளார்.