கேரள நர்ஸுக்கு மரண தண்டனை; பரபர தீர்ப்பு - பின்னணி என்ன?
ஏமனில், கேரளாவைச் சேர்ந்த நர்சுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனை
கேரளாவைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வசித்து பணியாற்றி வந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் இந்தியாவிற்கு திரும்பினர்.
ஆனால், வேலை காரணமாக நிமிஷா பிரியா மட்டும் ஏமனில் தங்கி இருந்து , தலால் மெஹதி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை துவங்கி உள்ளார். இதனால், இவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்திருந்த தலால் மெஹதி அதனை வழங்க மறுத்துள்ளார்.
மனு தள்ளுபடி
இதனால், 2017ல் தலால் மெஹதிக்கு மயக்க மருந்தை நிமிஷா பிரியா செலுத்தி உள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். தொடர்ந்து கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு 6 மாதமாக சிறையில் உள்ளார்.
இதற்கிடையில், உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியர்கள் ஏமன் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே அவரது தாயார் அங்கு செல்லமுடியவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "இன்று முதல் ஒரு வாரத்துக்குள் பிரியா நிமிஷாவின் தாயார் ஏமன் செல்லும் முடிவு குறித்துப் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.
முன்னதாக, நிமிஷா பிரியா தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ஏமன் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த ஏமன் உச்ச நீதிமன்றம் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உறுதிசெய்துள்ளது.