பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!
பைபிள் வைத்திருந்த தம்பதி மற்றும் குழந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பைபிள்
வடகொரியாவின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இங்கு சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. மிகக் கடுமையான விதிகள் உள்ளது. அதனை மீறினால்மூன்று தலைமுறைகளுக்குத் தண்டனை விதிக்கப்படும். இதனால் அங்குப் பல குடும்பங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பைபிளுடன் பிடிபட்ட கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் 2 வயதுக் குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
இது குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகவும் இதை உறுதி செய்ய முடிந்ததாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 70,000 பேர் கிறிஸ்தவர்களாக இருந்த ஒரே காரணத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் பல குழந்தைகளுக்கு வெறும் இரண்டு வயதே ஆகியுள்ளது. அந்த முகாம்கள் மிக மோசமானதாகவும் கடும் உடல் உழைப்பு தேவைப்படும் ஒன்றாகவும் இருக்கிறது. கைது செய்யும் வடகொரிய போலீசார், அவர்களை முகாம்களில் அடைக்கிறார்கள்.
சித்திரவதை செய்யப்பட்டு கடுமையாக வேலை வாங்கப்படலாம் எனக் கூறப்படுட்டுள்ளது.
வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி! IBC Tamil
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil