என்னை பற்றி எப்படி தேடலாம்? தகவல் தேடியவருக்கு மரண தண்டனை - பகீர்!
இணையத்தில் அதிபர் குறித்து தேடியவருக்கு மரண தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் தேடல்
வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் விஷயங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் மிகக் கொடூரமாகவும் இருக்கும்.
அதன் வரிசையில், இங்கு இணையதளம் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், ராணுவ உயரதிகாரிகளுக்கும், உளவுத்துறையினருக்கும் இணையதளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மரண தண்டனை
ஆனால், அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என்பதை கவனிக்க அரசாங்கக் குழு ஒன்று உள்ளது. இந்நிலையில், உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை கூகுளில் தேடியுள்ளார்.
அதனையடுத்து இதுகுறித்து அந்த குழு அதிபரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர் துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.