மரண தண்டனையை ரத்து செய்த ஆசிய நாடு - குவியும் வரவேற்புகள்!

Death Penalty Malaysia
By Sumathi Jun 11, 2022 05:17 PM GMT
Report

மரண தண்டனைகள் ரத்து செய்யப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது மரண தண்டனை இல்லாத உலகை அமைக்க வேண்டும் என்பது தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் லட்சியமாக உள்ளது.

மலேசிய அரசு

உலகிலுள்ள 195 நாடுகளில் 102 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 39 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை.

மரண தண்டனையை ரத்து செய்த ஆசிய நாடு - குவியும் வரவேற்புகள்! | Malaysian Government Abolished Death Sentence

இந்த நிலையில், மரண தண்டனைகள் ரத்து செய்யப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், மரண தண்டனைகளுக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மலேசிய அரசின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட 11 குற்றங்களுக்கு மரண தண்டனைகள் வழக்கப்பட்டு வந்தன.

மரண தண்டனையை ரத்து செய்த ஆசிய நாடு - குவியும் வரவேற்புகள்! | Malaysian Government Abolished Death Sentence

மரண தண்டனைகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், மரண தண்டனையை மலேசிய ரத்து செய்துள்ளது.

தூக்குத் தண்டனைக்கு எதிரான மசோதாவை அமைச்சரவை ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு பதிலாக என்னென்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும்

மலேசிய சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைதி ஜாஃபர் தெரிவித்துள்ளார். மலேசிய அரசின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.