8 இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை - பின்னணி என்ன?

Qatar India
By Sumathi Oct 27, 2023 03:47 AM GMT
Report

இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

8 இந்திய கடற்படையினர்

இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோருக்கும் முன்னாள் கமாண்டர்களான அமித் நாக்பால், புர்னெது திவாரி, சுகுனாகர் பாகலா,

8 இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை - பின்னணி என்ன? | Indian 8 Marines Sentenced To Death In Qatar

சஞ்சீவ் குப்தா, ராகேஷ் ஆகிய 8 அதிகாரிகள் கத்தாரில் ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

 மரண தண்டனை

இந்த நிறுவனம் கத்தார் ராணுவத்துக்கு சேவைகளை வழங்கி வந்துள்ளது. இந்த நிறுவனம் கத்தார் கடற்படை தொடர்புடைய நீர்மூழ்கி கப்பல் திட்டம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது.

8 இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை - பின்னணி என்ன? | Indian 8 Marines Sentenced To Death In Qatar

இந்நிலையில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசிய விவரங்களை இந்த 8 அதிகாரிகள் இஸ்ரேல் அரசுடன் பகிர்ந்துகொண்டதாகவும் இதனால், கத்தார் அரசு இவர்களைக் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். ஆனால், கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை. தொடர்ந்து, அவர்கள் அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!

பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!

மேலும், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்பது தொடர்பான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.