தூக்கு தண்டனை இல்லாமல் மரண தண்டனை - உச்ச நீதிமன்றம் தீவிர பரிசீலனை

Supreme Court of India
By Sumathi May 02, 2023 10:23 AM GMT
Report

வலியில்லாமல் மரண தண்டனை குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைக்கவுள்ளது.

 மரண தண்டனை

ரிஷி மல்ஹோத்ரா எனும் வழக்கறிஞர், தூக்கு தண்டனை நடைமுறைக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், தூக்கில் கைதிகள் தூக்கில் இடப்படும் முறையை மாற்ற வேண்டும் எனவும், வலியற்ற முறையில் மரண தண்டையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

தூக்கு தண்டனை இல்லாமல் மரண தண்டனை - உச்ச நீதிமன்றம் தீவிர பரிசீலனை | Execution Death Row Convicts Hanging Supreme Court

இந்த வழக்கின் விசாரணையில், தூக்கில் தண்டனையை நிறைவேற்றும் போது ஏற்படும் வலி, உயிர் பிரிவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் உள்ளிட்ட அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என நீதிபதிகள் கூறினர்.

மாற்று வழி

மேலும், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும்,

நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, ட்டுக்கொல்வது மற்றும் விஷ ஊசி செலுத்துவதை விட, நடப்பு தூக்கு தண்டனை நடைமுறையே உகந்தது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.