கஞ்சா கடத்திய வழக்கு - தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
கஞ்சா கடத்தியதாக தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தல்
2013-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து 1 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் கஞ்சா கைப்பறப்படவில்லை. ஆனால் கஞ்சாவை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு முறையீட்டு மனுக்களை அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்து வந்தனர். ஆனால் அத்தனை மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தூக்கு தண்டனை உறுதியானது.
மரண தண்டனை
அதன்படி, இன்று தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஐநா மனித உரிமை அமைப்பு உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்க மரண தண்டனையானது,
சிங்கப்பூர் குற்ற நீதி நடைமுறையில் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. 87 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர் என அந்நாட்டு சட்ட மற்றும் உள்விவகார மந்திரி சண்முகம் தெரிவித்துள்ளார்.