எதுக்கு இதெல்லாம் - நினைத்தாலே பயமா இருக்கு..! மனவருத்தத்தில் யாஷ்..! என்ன நடந்தது தெரியுமா..?

Yash Karnataka
By Karthick Jan 10, 2024 05:27 AM GMT
Report

கன்னட நடிகர் யாஷ் அண்மையில் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

யாஷ்   

கே.ஜி.எஃப் படங்களில் வெற்றி மூலம் இந்திய அளவில் பெரும் பிரபலமடைந்துள்ளார் நடிகர் யஷ். கன்னட மொழி படங்களில் முன்னணி நாயகனாக இருந்த அவர், அதனை தொடர்ந்து நடித்த கே.ஜி.எஃப் படங்கள் அவரை பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

yash-asks-fans-not-to-celebrate-in-harsh-ways

கடந்த 8-ஆம் தேதி தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடும் யஷ்'ஷிற்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை பொழிந்தன. அதே போல கர்நாடக மாநில அநேக இடங்களில் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி தீர்த்தனர்.

யஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் - துடிக்க துடிக்க உயிரிழந்த 3 ரசிகர்கள்..!

யஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் - துடிக்க துடிக்க உயிரிழந்த 3 ரசிகர்கள்..!


வருத்தம்  

இந்நிலையில், தான் அன்று அவருக்கு கட் அவுட் வைத்து கொண்டாட நினைத்த 3 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் கடக் பகுதியை சேர்ந்த 3 பேர் கட் அவுட் வைக்க முயற்சி செய்த போது, மின்சாரம் தாக்கி துடிதுடிக்க உயிரிழந்தனர்.

yash-asks-fans-not-to-celebrate-in-harsh-ways

அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகியோரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த பிறகு, யாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரசிகர்கள் முழுமனதாக வாழ்த்த வேண்டும் என்று நினைத்தால், இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள் என கேட்டுக்கொண்டு, அன்பு மனதில் இருந்தால் போதும் என்றும் அதுவே எனக்கு போதுமானது என்றும் கூறினார். 

பயமா இருக்கு..?

இதுபோன்ற துயரமான சம்பவங்கள் என்னுடைய சொந்த பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கின்றன என வருத்தத்துடன் குறிப்பிட்ட அவர், உங்களுடைய ரசிக மனப்பான்மையை இப்படி காட்டக் கூடாது என்றார்.

பாஜகவின் முக்கிய பொறுப்பில் கீர்த்தி சுரேஷின் தந்தை - பரபரக்கும் அரசியல் களம்!

பாஜகவின் முக்கிய பொறுப்பில் கீர்த்தி சுரேஷின் தந்தை - பரபரக்கும் அரசியல் களம்!


உங்களுடைய அன்பை தயவு செய்து இந்த வழியில் காட்டாதீர்கள் என அனைவரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி, பேனர் வைப்பதோ, பைக் ரேஸில் ஈடுபடுவதோ, ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதோ வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

yash-asks-fans-not-to-celebrate-in-harsh-ways

என்னைப் போலவே என்னுடைய ரசிகர்களும் வாழ்க்கையில் வளரவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்காகவே மட்டும் அர்ப்பணித்து பணியாற்றுங்கள். அவர்களை பெருமைப்படுத்தும் குறிக்கோளை மனதில் வையுங்கள்” என்றார் யாஷ்.