Wednesday, May 7, 2025

பாஜகவின் முக்கிய பொறுப்பில் கீர்த்தி சுரேஷின் தந்தை - பரபரக்கும் அரசியல் களம்!

Keerthy Suresh BJP Kerala
By Sumathi a year ago
Report

  கீர்த்தி சுரேஷின் தந்தை பாஜகவில் முக்கிய பொறுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுரேஷ்குமார்

மலையாளத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமாவார் சுரேஷ்குமார். துணிச்சலாக எதையும் பொதுத்தளத்தில் பேசக்கூடியவராக அறியப்படுகிறார்.

actress keerthy suresh family

2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக அனைத்து மாநிலத்திலும் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை தனது கட்சியில் முக்கிய பொறுப்பில் சேர்த்து வருகிறது.

இதெல்லாம் பிடிக்கல.. விஜய் மேல இவ்வளவு வன்மமா? கீர்த்தி சுரேஸ் அப்பா காட்டம்!

இதெல்லாம் பிடிக்கல.. விஜய் மேல இவ்வளவு வன்மமா? கீர்த்தி சுரேஸ் அப்பா காட்டம்!

முக்கிய பொறுப்பு

கேரளத்தில் பாஜகவின் ஆளுமை குறைவினால் அங்கு திரையுலகை சேர்ந்தவர்களை தனது கட்சியில் சேர்த்து வருவதில் மும்முரம் காட்டுகிறது. முன்னதாக நடிகரும், இயக்குநருமான மேஜர் ரவி, நடிகர்கள் தேவன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

producer suresh kumar

தற்போது அந்த வரிசையில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ்குமார் பாஜகவில் இணைக்கப்பட்டு, கேரள மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருச்சூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட நடிகர் சுரேஷ் கோபிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.