கீர்த்தி சுரேஷ் காதல் குறித்து முதல்முறையாக உண்மை உடைத்த அவரது அம்மா!
நடிகை கீர்த்தி சுரேஷ் ரிசார்ட் ஓனரை காதலித்து வருவதாக பரவிய வதந்திக்கு அவரது அம்மா விளக்கமளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தமிழில் 'இது என்ன மாயம்' என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார்.

சமீப காலமாக, கீர்த்தி சுரேஷுடன் நடிகர் விஜய் நெருக்கமாக உள்ளதாக வதந்தி தீயாய் பரவி வந்தது. இதனால் தனது மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறப்பட்டது.
தாய் விளக்கம்
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 13 ஆண்டுகளாக ரிசார்ட் உரிமையாளர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் அம்மா மேக்னா, இணையத்தில் பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

அதில், முழுக்க முழுக்கப் பொய்யான, பரபரப்புக்காகக் கிளப்பி விடப்பட்டிருக்கிற செய்தி. இதுபோல் வெளியாகும எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட எங்களுக்கு விரும்பவில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான இணையத்தில் பரவிவரும் வதந்திக்கு எங்களுடைய பதில் இதுதான். இதுபற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லை என கோபமாக தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil