யஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் - துடிக்க துடிக்க உயிரிழந்த 3 ரசிகர்கள்..!
நடிகர்களின் பிறந்தநாள், படவெளியீடு போன்றவற்றை கொண்டாடுவதில் பெரும்பாலான ரசிகர்கள் விபரீதமான முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
யஷ்
கே.ஜி.எஃப் படங்களில் வெற்றி மூலம் இந்திய அளவில் பெரும் பிரபலமடைந்துள்ளார் நடிகர் யஷ். கன்னட மொழி படங்களில் முன்னணி நாயகனாக இருந்த அவர், அதனை தொடர்ந்து நடித்த கே.ஜி.எஃப் படங்கள் அவரை பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடும் யஷ்'ஷிற்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர். அதே போல கர்நாடக மாநில அநேக இடங்களில் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
விபரீதம்
இந்நிலையில், தான் இன்று அவருக்கு கட் அவுட் வைத்து கொண்டாட நினைத்த 3 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் கடக் பகுதியை சேர்ந்த 3 பேர் கட் அவுட் வைக்க முயற்சி செய்த போது, மின்சாரம் தாக்கி துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கே.ஜி.எஃப் படங்களை தொடர்ந்து அண்மையில் தான் யஷ்'ஷின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பும் வெளியானது. மலையாள இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் "Toxic" என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளார். படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil