அம்பானி வீட்டு திருமணம்: குத்தாட்டம் போட்ட WWE வீரர் ஜான் சீனா - வைரல் Video!

Viral Video Wedding India Mukesh Dhirubhai Ambani Mumbai
By Jiyath Jul 13, 2024 07:12 AM GMT
Report

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

திருமண விழா

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 'ஜியோ உலக மாநாட்டு மையத்தில்' தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

அம்பானி வீட்டு திருமணம்: குத்தாட்டம் போட்ட WWE வீரர் ஜான் சீனா - வைரல் Video! | Wwe John Cena Dancing In Ambani Home Wedding

இந்த திருமண விழாவில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள், மற்றும் வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

'பிரியா பவானி சங்கர் கதறல்ஸ்' - கிண்டலுக்கு நடிகை கொடுத்த பதில்..?

'பிரியா பவானி சங்கர் கதறல்ஸ்' - கிண்டலுக்கு நடிகை கொடுத்த பதில்..?

ஜான் சீனா

அந்தவகையில் , WWE மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனாவும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

அம்பானி வீட்டு திருமணம்: குத்தாட்டம் போட்ட WWE வீரர் ஜான் சீனா - வைரல் Video! | Wwe John Cena Dancing In Ambani Home Wedding

இந்நிலையில் திருமண விழாவில் ஜான் சீனா நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள சில போட்டிகளுடன் WWE போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக ஜான் சீனா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.