'பிரியா பவானி சங்கர் கதறல்ஸ்' - கிண்டலுக்கு நடிகை கொடுத்த பதில்..?
தன்னை பற்றிய கிண்டல் பதிவுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலளித்துள்ளார்.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன் 2' நேற்று வெளியானது. இந்த படத்தில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா,

ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும், இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தற்போது வரை கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பிரியா பவானி
படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டதாக பலரும் கூறி வரும் நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்களும் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், நடிகை பிரியா பவானி சங்கரை கிண்டலடித்து பதிவிட்ட ஒரு பதிவில் அவரே சிரித்தபடி பதிலளித்துள்ளார்.

அதில், "அட பாவிங்களா.. இது ஜஸ்ட் கதறல்ஸ் பாடலில் பிரியா பவானி சங்கர்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிலுக்கு கீழ் ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் கமெண்டு செய்து வருகின்ற்னர்.
விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan