'எல்லாத்தையும் சோஷியல் மீடியால போடுவேன்' - ரச்சிதாவை மிரட்டிய தயாரிப்பாளர்?

Tamil Cinema Rachitha Mahalakshmi Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jul 13, 2024 11:56 AM GMT
Report

நடிகை ரச்சிதா மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர், இயக்குநரான ஜேஎஸ்கே சதீஷ் இடையே சமூக வலைதளத்தில் வாக்குவாதம் நடந்து வருகிறது . 

ரச்சிதா மகாலட்சுமி

ஜேஎஸ்கே சதீஷ் இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் 'ஃபயர். இதில் பிக்பாஸ் பிரபலங்கள் ரச்சிதா மகாலட்சுமி, பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலாஜி முருகதாஸ், "ஃபயர் படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட சம்பளம் கிடைக்கவில்லை. சினிமாவை விட்டு விலகப் போகிறேன்" என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், இது படத்திற்கான ப்ரோமோஷனாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இதனையடுத்து பாலாஜி முருகதாஸின் பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, " இந்த ஏமாற்று இடத்திலிருந்து நான் முன்பே வெளியேறி விட்டேன். உங்களுக்கு இப்போது தான் தெரிகிறது. ஆனாலும் பரவாயில்லை. இனி நான் தனியாள் கிடையாது. எனக்கு ஒரு துணை கிடைத்து விட்டது.

நீங்கள் ஒரு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக இருக்கலாம். அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்க வேண்டாம். தன்வினை தன்னைச் சுடும். நீங்கள் ஒரு தயாரிப்பாளர் என்று சொல்வதற்கே அருகதையற்றவர்" என்று ஜேஎஸ்கே சதீஷை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

ஜேஎஸ்கே சதீஷ்

இந்நிலையில் ரச்சிதாவின் குற்றச்சாட்டிற்கு எதிராக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சதீஷ், "வணக்கம் ரச்சிதா ’நீங்க நடிச்சததான் உங்கள் பிறந்தநாளுக்கு கிளிம்ஸ் ஆக போட்டிருக்கேன்.

நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடல. இன்னும் படம் வெளியே வரும் போது நீங்க நடித்த காட்சிகள் எல்லாம் வெளியில் வரும். நீங்கள் சம்பளம் வாங்கிவிட்டு தான் நடிச்சுருக்கீங்க. இனாமாக நடிச்சு கொடுக்கலை. அதற்கு அக்ரீமெண்ட் என் கையில் இருக்கிறது. நீங்கள் பணம் வாங்கியதற்கு ஆதாரமும் என் கையில் இருக்கிறது.

அதனால் உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க. தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவில் போடுற மாதிரி ஆயிடும். மதுரை வினையும் பிக் பாஸ் வினையும் தன்னைச்சுடும், குருவே சரணம்’. ஃபயர்’ படத்தில் தாங்கள் நடித்ததை மறந்து விட்டீர்கள்.

அந்த படத்தை shit என்று விமர்சனம் செய்துள்ளீர்கள். அந்த ஷிட்டில் நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.