இந்தியன் 1க்கும் இந்தியன் 2க்கும் உள்ள வேறுபாடு என்ன? - சீமான் தந்த விளக்கம்
இன்று உலகமுழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 படம் வெளிவந்துள்ளது.
இந்தியன் 2
1996-ஆம் ஆண்டு வெளியான கமல் - சங்கர் கூட்டணியின் இந்தியன் படம் மிக பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படத்தின் 2-ஆம் பாகம் 2017-ஆம் ஆண்டு துவங்கி இன்று திரையில் வந்துள்ளது.
கமல், சித்தார்த், ரகுல், பிரியா பவானி சங்கர் என பலர் நடிக்க, சங்கர் இயக்கி, அனிருத் இசையமைத்து லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ள படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
படத்தின் இறுதியில் 3-ஆம் பாகத்திற்கான ட்ரைலர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கமலுடன் இணைந்து நாம் தமிழர் சீமான் பார்த்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முதல் பாகத்திற்கும், 2-ஆம் பாகத்திற்கும் வித்தியாசம் என்ன என கேட்கப்பட்டது.
வித்தியாசம்
அதற்கு பதிலளித்த சீமான், இந்தியன் 1'இல் தாத்தா ஒருவர் வந்து சுத்தம் செய்வார். ஆனா இப்போ நீயே சரி பண்ணு'னு இருக்கு. உங்க வீட்ல நீங்க ஒட்டடை அடிங்க.
அதுக்கு clean india வேண்டாம்.
உன் வீடு தூய்மையை வைங்க. நாடு சுத்தமாகிடும். அது தான் கதாபாத்திரமே சொல்லுது. நபிகள், ஏசுபிரான், கிருஷ்ணர் வருவார்'னு இல்ல. நீ எதிர்த்து கேள்வி கேளு. நாங்க தினமும் பேசுறது தான் படத்துல இருக்கு.