சங்கர் - கமலின் இந்தியன் 2!! 28 ஆண்டுகளுக்கு பிறகு தாத்தா சறுக்கினாரா - சாதித்தாரா? Twitter Review

Kamal Haasan Shankar Shanmugam Indian 2
By Karthick Jul 12, 2024 05:21 AM GMT
Report

பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 review

கமல் - ஷங்கர் கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியான படமான இந்தியன் அப்போதே பான் இந்தியன் வெற்றியாக மாறியது.

Indian 2 posters

ஷங்கரின் இயக்கம், கமலின் நடிப்பு கெட்டப், கதைக்களம், ஏ.ஆர்.ரகுமானின் இசை என படம் ரசிகர்களை திருப்திபடுத்திய நிலையில், 100 நாட்களை கடந்து நாட்டின் பல இடங்களில் வெற்றி விழா கொண்டாடியது இப்படம்.

சுமார் 28 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இன்று இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது. இம்முறை ஷங்கர் - கமல் உடன் சித்தார்த், ரகுல், விவேக், பாபி சிம்ஹா ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலாக உள்ளே அனிருத் வந்தார்.

2017-ஆம் ஆண்டு துவங்கிய படம் சுமார் 7 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது. விக்ரம் படத்திற்கு முன்பு பெறும் நெருக்கடியில் கமல் சிக்கி தவித்த காரணத்தால், படம் முடங்கியது.

விக்ரம் படத்தின் வெற்றி அனைத்தையும் மாற்றியது. மீண்டும் இந்தியன் தாத்தாவாக வந்துள்ளார் கமல். படத்திற்கு இன்று சிறப்பு காட்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வரை இணையத்தில் வெளியாகியுள்ள விமர்சனங்களின் படி, சற்று கலவையான விமர்சனமே தென்படுகிறது.     

மைக்கேல் மதன காமராஜன் பட நடிகர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

மைக்கேல் மதன காமராஜன் பட நடிகர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

படத்தின் இறுதியில் அடுத்த பாகம் அதாவது இந்தியன் 3 படத்திற்கான ஒரு லீட் வைத்தது மட்டுமின்றி, படத்தின் ட்ரைலர் இணைக்கப்பட்டுள்ளது.