முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா: பில் கேட்ஸ் முதல் தோனி வரை - குவிந்த பிரபலங்கள்!

India Mukesh Dhirubhai Ambani Marriage
By Jiyath Mar 02, 2024 09:49 AM GMT
Report

முகேஷ் அம்பானி இல்ல திருமண விழாவில் உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை குவிந்துள்ளனர்.

திருமணம் 

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி-நீத்தா அம்பானி தம்பதியினரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா: பில் கேட்ஸ் முதல் தோனி வரை - குவிந்த பிரபலங்கள்! | Celebrities In Anant Ambani Weddinng

இவர்களின் திருமணத்தை ரூ.1000 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. முதல்நாளான நேற்று விழாக்கோலம் பூண்டுள்ள ஜாம்நகரில் உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை குவிந்துள்ளனர்.

குவிந்த பிரபலங்கள் 

அதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இவாங்கா டிரம்ப், பூட்டான் மன்னர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா: பில் கேட்ஸ் முதல் தோனி வரை - குவிந்த பிரபலங்கள்! | Celebrities In Anant Ambani Weddinng

அதேபோல் சினிமா பிரபலங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், ராம் சரண் , ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், அமீர்கான், இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும், விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, பொல்லார்ட், ட்ரெண்ட் போல்ட், சாம் கரன், சாய்னா நேவால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.