பிரியாணியில் புழு; பதறிய கஸ்டமர் - அசால்ட்டாக பதில் சொன்ன ஸ்விக்கி ஊழியர்!

Hyderabad Swiggy Biriyani
By Sumathi Jun 25, 2024 10:10 AM GMT
Report

சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக நபர் ஒருவர் புகாரளித்துள்ளார்.

பிரியாணியில் புழு

ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய் தேஜா என்பவர் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக புகாரளித்துள்ளார்.

பிரியாணியில் புழு; பதறிய கஸ்டமர் - அசால்ட்டாக பதில் சொன்ன ஸ்விக்கி ஊழியர்! | Worm In The Biryani Swiggys Shocking Answer

சிக்கன் துண்டில் இருந்த புழுவின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இதுகுறித்த தனது பதிவில், ஸ்விக்கியில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணிக்காக ரூ.318 கொடுத்ததாகவும்,

பிரியாணி கடை போட்ட ஐஐடி பட்டதாரி - மாதம் ரூ.3 கோடி வருமானமாம்!

பிரியாணி கடை போட்ட ஐஐடி பட்டதாரி - மாதம் ரூ.3 கோடி வருமானமாம்!

ஸ்விக்கி பதில்

இது குறித்து ஸ்விக்கியிடம் தான் தெரிவித்த போது அதற்காக ரூ.64 மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்விக்கி ஊழியருடன் பேசிய ஸ்க்ரீன் ஷாட்டையும் பதிவிட்டுள்ளார்.

தயவு செய்து இனிமேல் மெஹ்ஃபில் குகட்பல்லி கடையில் இருந்து உணவு ஆர்டர் செய்வதை நிறுத்து விடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபலமான கடையில் இருந்து ஆர்டர் செய்த பிரியாணியில் புழு கிடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.