பிரபல பிரியாணி கடைக்கு செக்; அடேங்கப்பா.. ஆய்வில் ஆடிப்போன அதிகாரிகள்!
பிரபல பிரியாணி கடையில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல பிரியாணி ஷாப்
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டா. இவர் அங்கு எட்டையாபுரம் சாலையில் அனிபா பிரியாணி என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். ‘பிரியாணிகளின் அரசன்’ என்ற விளம்பரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு திடீரென உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சமைத்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், ஒன்றரை கிலோ மீன் வகைகள்,
உணவு பறிமுதல்
3 கிலோ சாதம், 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், இரண்டரை கிலோ பிரட் அல்வா, நூடுல்ஸ், சப்பாத்தி மாவு, மைதா மாவு, தேதி குறிப்பிடாத சோயா சாஸ் ஆகியவை இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, பறிமுதல் செய்த உணவுகளை கொட்டி அளித்தனர். மேலும் உணவகம் நடத்துவதற்கு உணவு பாதுகாப்பு உரிமம் அனுமதி பெறாமல் நடத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, உரிமத்தை ரத்து செய்து தற்காலிகமாக கடையை இயக்க தடை விதித்தனர். இச்சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.