ஹோட்டல் சாம்பாரில் பிளாஸ்டிக், கரப்பான் பூச்சி, ஈக்கள் சூழ்ந்த சமையலறை - அதிகாரிகள் அதிரடி!
உணவகம் ஒன்றில் உணவருந்திய 6 பேர் வாந்தி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உணவகம்
சென்னை, தியாகராய நகர், பிஞ்சுளா சுப்பிரமணியன் தெருவில் பிரபல செட்டிநாடு உணவகமான விருதுநகர் அய்யனார் உணவகம் உள்ளது. இதில் நேற்று மதியம் 15 பேர் சிக்கன், மட்டன் பிரியாணி போன்ற உணணவுகளை ஆர்டர் செய்து உண்டனர்.
இதில் பிரியாணி, முட்டை, சிக்கன் உள்ளிட்டவை கெட்டுப்போயிருந்தது. இதனை உண்டு 6 பேர் வாந்தி வருவதாக கூறி புகாரளித்தனர். அனால் உணவகத்தின் ஊழியர்கள் முழுவதையும் சாப்பிட்டுவிட்டு கூறவேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அதிரடி
இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகாரளித்தனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். அவர்கள் சாப்பிட உணவுகளை ஆய்வு செய்தனர், பின்னர் சமையல் கூடாரத்திற்குள் சென்று அங்குள்ள ப்ரீஸர் பாக்ஸை சோதனையிட்டனர், அதில் கெட்டுப்போன சிக்கன் போன்ற இறைச்சிகள் இருந்துள்ளன.
மேலும், அதில் கரப்பான் பூச்சிகள் ஓடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த சாமாபாரை சோதனையிட்டனர், அதில் ஒரு பிளாஸ்டிக் பை கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். பின்னர் அந்த சமையல் கூடாரம் மொத்தமும் ஈக்கள் மொய்த்துகொண்டிருந்தன.
இதில் கடுப்பான அதிகாரி இதை நீங்க சாப்பிடுவீங்களா என்று உரிமையாளரிடம் எடுத்து நீட்டினார். அதன்பின்னர், கடையை இழுத்துமூடவேண்டும் என்று கூறி அதிரடி நடவடிக்கை எடுத்து, அந்த உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.