சாப்பிட்டவுடன் வாந்தி வருவது போல் உள்ளதா? அப்போ இந்த நோயாக இருக்கலாம்

lifestyle-health
By Nandhini Aug 16, 2021 10:05 AM GMT
Report

குமட்டல், வாந்தி என்பதே கொஞ்சமும் சமாளிக்க முடியாத உணர்வு. அது எந்தவித வேலையையும் செய்ய விடாமல் நம்முடைய ஒட்டும்மொத்த மனநிலையையும் மாற்றி ஒரு இடத்தில் அமர வைத்துவிடும். அந்த உணர்வுடன் நடக்கும் போராட்டத்திற்கு வார்த்தைகளே இருக்காது.

குமட்டால் என்பது நோய் வருவதற்கான ஓர் அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலிமூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. செரிமானமின்மை, வயிற்று புண், ஒவ்வாமை, காய்ச்சல் போன்றவற்றால் குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறது. 

சிலருக்கு சாப்பிட்டதும் வாந்தி வருவது போல் உணர்வு இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடிக்கடி வாந்தி வருவதுண்டு. சிலருக்கோ சாப்பாட்டின் வாசனையை நுகர்ந்தாலே வாந்தி வருவது போல் இருக்கும்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி வருவது இயல்புதான்.

ஆனால் இதுவே சாதாரணமாக இருக்கும் போது சாப்பிட்டவுடன் வாந்தி வந்தால், அது உங்களுக்கு மிகவும் ஆபத்தாகும்.

இப்படி சாப்பிட்டவுடன் வாந்தி வந்தால் அது தீவிர நோய்களின் அறிகுறியாககூட இருக்கலாம்.

  • சாப்பிடும்போது, வயிற்றின் உள்ளே ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படும். இதன் காரணமாககூட வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க இருக்கும்.
  • சிலருக்கு உடலில் இரத்தம் இல்லாமல் இருந்தாலோ அல்லது மஞ்சள் காமாலை இருந்தாலோ சாப்பிட்டவுடன் நன்கு ஜீரணமாகாமல் வாந்தி ஏற்படுகிறது.
  • கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உறுப்புகளில் கற்கள் இருந்தால்கூட சாப்பிடவுடன் வாந்தி வரும்.
  • சிலருக்கு வயிறு சரியில்லாமல் இருந்தால் வாந்தி ஏற்படும். 

சாப்பிட்டவுடன் வாந்தி வருவது போல் உள்ளதா? அப்போ இந்த நோயாக இருக்கலாம் | Lifestyle Health