கெட்டுப்போன 20 கிலோ மாட்டிறைச்சி, சிக்கன் பிரியாணி; ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!
சேலத்தில் உள்ள ஹோட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டது அதிகாரிகள் 20 கிலோ மாட்டிறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் ஹோட்டல்களில் சோதனை நடத்த உத்தரவிட்டதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் திடீரென ஹோட்டல்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அண்மையில் ஆரணியில் கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதையடுத்து சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆட்சியரின் அறிவுறுத்தல் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். சாய்நாதபுரம், பாகாயம் போன்ற பகுதிகளில் உள்ள 16 கடைகளில் ஆய்வு செய்தனர்.
குளிர்சாதன பெட்டியில் வைத்து மீன், இறைச்சி போன்றவை என்பதை தீவிரமாக பரிசோதித்தனர். அந்த சோதனையின் போது 20 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி, 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவு கலர் பயன்படுத்தப்பட்ட 2 கிலோ சிக்கன் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சுகாதாரமின்றி இயங்கிய 3 ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸும் வழங்கியுள்ளனர்.