பிரியாணி கடை போட்ட ஐஐடி பட்டதாரி - மாதம் ரூ.3 கோடி வருமானமாம்!
ஐஐடி பட்டதாரி ஒருவரின் பிரியாணி கடை வைரலாகி வருகிறது.
ஐஐடி பட்டதாரி
ஆக்ராவைச் சேர்ந்தவர் விஷால் ஜிண்டால். புவனேஷ்வர் ஐஐடியில் படித்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் டிரேடிங்கில் நல்ல லாபத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், லோக்கல் உணவை ஒரு தேசிய பிராண்டாக மாற்ற வேண்டும் என எண்ணியுள்ளார்.
அதன்பின், 2015ல் தனது நண்பர் கௌஷிக் ராயுடன் சேர்ந்து பிரியாணி தொழிலை ஆரம்பித்துள்ளார். ஹரியாணா, குருகிராமில் பிரியாணி பை கிலோ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
பிரியாணி பை கிலோ
தொடர்ந்து பெரும் பிரபலமானது. மேலும், தந்தையுடன் ஆதரவில் நிறுவனத்தை டெலிவரி சார்ந்ததாக உருவாக்கியுள்ளார். தற்போது, தம் பிரியாணிகள், கபாப்கள், குருமா போன்ற உணவு வகைகளை தயாரித்து விற்கிறது. இந்தியா முழுவதும் 45க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரியாணி பை கிலோ நிறுவனம் செயல்படுகிறது.
2019ல் 18 கிளைகளில் இருந்து மாதம் ரூ.3 கோடி வருமானம் வந்துள்ளது. 2023ல் வருமானம் ரூ.221.75 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2024ல் ரூ.1000 கோடி லாபத்தை எட்டும் என நம்புகிறார். அதனையடுத்து, வெளிநாடுகளிலும் தனது நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.