சோறுன்னாலே பிரியாணி தான்; மீண்டும் மீண்டும் சாதனை - கவனிச்சீங்களா?

India Swiggy Biriyani
By Sumathi Dec 15, 2023 07:25 AM GMT
Report

இணையம் மூலம் அதிகம் வாங்கப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

ஸ்விக்கி அறிக்கை

ஸ்விக்கி நிறுவனம் வருடம் தோறும் அறிக்கை ஒன்றை வெளியிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு(2023) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஸ்விக்கியில் 2 விநாடிக்கு 5 பிரியாணி வாங்கப்பட்டுள்ளது.

biryani-sets-records

20 லட்சத்து 49 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் முதல் ஆர்டராக பிரியாணி வாங்கியுள்ளனர். ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் பிரியாணி வாங்கப்பட்டுள்ளன. அதிகமுறை ஆர்டர்கள் செய்யப்பட்ட உணவாக 8 ஆவது முறையாக இந்த ஆண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

பிச்சையா இது? வெயில்ல நிக்கவைச்சுருக்கீங்க; பிரியாணி இலவசம் - கலெக்டர் அதிரடி!

பிச்சையா இது? வெயில்ல நிக்கவைச்சுருக்கீங்க; பிரியாணி இலவசம் - கலெக்டர் அதிரடி!

பிரியாணி 

மேலும், மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு நடப்பாண்டில் மட்டும் உணவினை இணையம் மூலம் வாங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 31 ஆயிரத்து 748 ரூபாய்க்கு ஒரே ஆர்டரில் காஃபி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வாங்கியுள்ளார்.

swiggy biriyani

இதனைத் தொடர்ந்து, உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது 188 லட்சம் பீட்சாக்கள் வாங்கப்பட்டுள்ளன. துர்கா பூஜையின் போது குலாப் ஜாமூன் மற்றும் ரசகுல்லா மட்டும் 77 லட்சம் ஆர்டர்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளன.