பிச்சையா இது? வெயில்ல நிக்கவைச்சுருக்கீங்க; பிரியாணி இலவசம் - கலெக்டர் அதிரடி!

Tamil nadu
By Sumathi Jul 10, 2023 04:14 AM GMT
Report

கூட்டம் சேர்த்த பிரியாணி கடையை பூட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பிரியாணி இலவசம் 

வேலூர், காட்பாடியில் ‘தம்பி பிரியாணி’ என்ற பெயரில், புதிதாக பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது. அதனை முன்னிட்டு சிக்கனோ, மட்டனோ ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டது.

பிச்சையா இது? வெயில்ல நிக்கவைச்சுருக்கீங்க; பிரியாணி இலவசம் - கலெக்டர் அதிரடி! | Biriyani Shop Crowd Vellore Collector Took Action

இதனால் கூட்டமாக முண்டியடித்த மக்களால் சாலை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மக்கள் வெயிலில் கஷ்டப்படுவதை பார்த்தார்.

கலெக்டர் அதிரடி

இதனால் காரை விட்டு இறங்கியவர், பிச்சையா போடுறீங்க... எல்லோரையும் மரியாதையாக உட்கார வைக்க முடியாதா..? எத்தனைப் பேர் நிற்கிறாங்க, பாவம்! எல்லோரையும் போகச் சொல்லுங்க. கடையை மூடுங்க’’ என்று கடை மேலாளரிடம் அறிவுறுத்தினார். அதன்பின் கடை இழுத்து மூடப்பட்டது.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், கூட்டம் கூடுவதே தவறு. அதுவும் சாப்பாட்டுக்காக கூட்டத்தை சேர்ப்பது மிகவும் தவறு. கடை உரிமையாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன். மாநகராட்சி ஆணையரிடமும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அதுவரை கடையை மூட உத்தரவிட்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.