அடிக்கடி பிரியாணி சாப்பிடுவர்களா நீங்கள்?.. உங்களுக்கான எச்சரிக்கை பதிவு இதோ!

danger Food Briyani
By Rooban Apr 15, 2021 05:07 AM GMT
Rooban

Rooban

in உணவு
Report

இன்றைய நவீன காலக்கட்டத்தில் அனைவரும் உணவில் கவனம் எடுத்துக்கொள்வதே இல்லை. தரமற்ற கடை உணவுகளை உண்டு பல நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

அதிலும் பாஸ்புட் உணவு வகைகள் நிறைய கேடுகளையும் விளைவிக்கிறது. அதைத்தொடர்ந்து அப்படி பிரியாணி உணவுகளிலும் இருக்கும் ஆபாத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

பிரியாணி என்றாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது. அனைத்து வகையான கொண்டாட்டத்திற்குமே பிரியாணியை தான் விருந்து வைப்பது பலகிவிட்டது.

ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும்.

அடிக்கடி பிரியாணி சாப்பிடுவர்களா நீங்கள்?.. உங்களுக்கான எச்சரிக்கை பதிவு இதோ! | Briyani Danger Food Problems

விளைவுகள்;

  • வயிறு முழுவதும் சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது.
  • மேலும், சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.

  • அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

  • மேலும், பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது.

  • இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

  • அதன் பின்னர், பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

  • கடைசியாக, நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.