உலகின் உயரமான கட்டிடம்; ஆனால், 25 ஆண்டுகளாக யாருமே இல்லை - என்ன காரணம்?
25 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உயரமான கட்டிடம் ஒன்று உள்ளது.
Ryugyong
வடகொரியாவின் தலைநகரான Pyongyang-ல் Ryugyong என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் உயரம் 1082 அடி. இதில் 3000 அறைகள் கட்டும் திட்டம் இருந்தது.

ஆனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. அதற்கு ஹோட்டல் ஆஃப் டூம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் கட்டுமானம் 1987-ல் தொடங்கி, 2 வருடங்கள் கழித்து திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.
சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இது உலகின் மிக உயரமான ஹோட்டலாக இருந்திருக்கும். ஆனால், தற்போது பூமியின் மிக உயரமான காலியான கட்டிடம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இதை கட்டுவதற்கு 1.6 பில்லியன் பவுண்டுகள் செலவாகியுள்ளது.
காலியான கட்டிடம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் 1997ல் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்குள் இந்த ஹோட்டல் கட்டப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அது நிறைவேறவில்லை.

இந்த கட்டிடத்தில் சில குறைபாடுகளும் உள்ளன. லிப்ட் ஷாஃப்ட் வளைந்துள்ளது. அதன் தளங்கள் சாய்வாக உள்ளது. ஹோட்டலின் அமைப்பு துருப்பிடித்து பலவீனமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
பின் 2018ல் கட்டிடத்தில் எல்இடி பேனல்கள் நிறுவப்பட்டன. தொடர்ந்து, வட கொரிய அரசாங்க பிரச்சாரத்திற்கான மாபெரும் திரையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil