சாகசம் செய்ய நினைத்து... 69-வது மாடியிலிருந்து தடுமாறி உயிரைவிட்ட பிரபலம் - சோகத்தில் ரசிகர்கள்!

France Hong Kong Death
By Vinothini Jul 31, 2023 07:46 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 சாகசம் செய்துவரும் பிரபலம் ஒருவர் 69-வது மாடியிலிருந்து தடுமாறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரபலம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி, 30 வயதான இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார்.

skyscraper-climbs-felt-from-68th-floor-and-dies

இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த வாரம், இவர் ஹாங்காங் மத்திய பகுதியில் உள்ள ட்ரெகன்டர் சாலைக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள ட்ரெகன்டர் டவர் எனும் ஒரு மிக உயரமான கட்டிடத்தில் இருந்து படம் பிடிக்கும் நோக்கில், காவலாளியிடம் நண்பனை பார்க்க உள்ளே செல்வதாக பொய் சொல்லிவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

உயிரிழப்பு

இந்நிலையில், அவர் லிஃப்டில் ஏறி 49-வது மாடிக்கு சென்றார், பின்னர் அங்கிருந்து மொட்டை மாடிக்கான கதவின் பூட்டை அவர் உடைத்து கொண்டு மேல் மாடி வரை சென்றார். அங்கு சில ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அங்கு அவர் நிலைதடுமாறினார், அப்பொழுது உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார்.

skyscraper-climbs-felt-from-68th-floor-and-dies

அங்குள்ள பணிப்பெண் காவல் துறைக்கு தெரிவித்தார், அப்பொழுது போலீஸ் வருவதற்குள் அவர் தடுமாறி கீழே தவறி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவக்குழு அவர் இறந்ததாக தெரிவித்தனர்.

அருகில் அவர் எடுத்த பல புகைப்படங்களை கொண்ட அவரது கேமரா கிடந்தது. பிரான்ஸ் நாட்டு அடையாள அட்டை ஒன்று அருகே இருந்ததை கொண்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.