ஐபிஎல் தொடருக்கு நடுவே பீஸ்ட் படம் பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் வியப்பு

beast Thalapathyvijay IPL2022 TATAIPL beastmodeon abhinavmukund
By Petchi Avudaiappan Apr 13, 2022 08:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடருக்கு நடுவே பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை பார்த்து ரசித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஐபிஎல் தொடருக்கு நடுவே பீஸ்ட் படம் பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் வியப்பு | Abhinav Mukund On Beast Mixed Review

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக முடங்கி கிடந்த திரையுலகம் அடுத்தடுத்து வெளியாகும் ஸ்டார் நடிகர்களின் படங்களால் மீண்டும் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. 

இதனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமும், ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் -2 படமும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்து வரும் தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல் தொடருக்கு நடுவில் பீஸ்ட் படத்தை பார்த்து ரசித்தேன் என்று தெரிவித்துள்ளார். பொழுது போக்குகள் நிறைந்த அம்சங்கள் படத்தில் நிறைய இருப்பதாகவும், நான் படித்த நெகட்டிவ் ரிவீயூஸ் போல் படம் இல்லை என்று தெரிவித்தார். அனிரூத் இசை சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார்.