'உலகின் உயரமான கட்டிடம்' என்ற அந்தஸ்தை இழக்க போகும் புர்ஜ் கலிஃபா..! ஏன் தெரியுமா?

Saudi Arabia United Arab Emirates World
By Jiyath Jan 06, 2024 09:44 AM GMT
Report

சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் (Jeddah) கிங்க்டம் டவர் என்றும் அழைக்கப்படும் ஜெட்டா டவர் (Jeddah Tower) கட்டப்பட்டு வருகிறது.

புர்ஜ் கலிஃபா

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரான துபாயில் 2717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) உள்ளது.

உலகெங்கிலும் இருந்து பலர் தினமும் இதை காண துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர். இந்நிலையில் "உலகின் உயரமான கட்டிடம்" எனும் அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் (Jeddah) கிங்க்டம் டவர் என்றும் அழைக்கப்படும் ஜெட்டா டவர் (Jeddah Tower) கட்டப்பட்டு வருகிறது.

உயரமான கட்டிடம்

இக்கட்டிடத்தை ஏட்ரியன் ஸ்மித் (Adrian Smith) எனும் அமெரிக்காவை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளார். இவர்தான் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தையும் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் 157-வது தளத்தில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், ஊரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் அமைய உள்ளது.

இது கட்டி முடிக்கப்பட்டால், 3281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகின் முதல் "1 கிலோமீட்டர் உயர கட்டிடம்" என்ற புகழை பெறும்.