உலகின் 2வது பன்றி இதய மாற்று சிகிச்சை செய்த நபர்.. அடுத்த 40 நாளில் நேர்ந்த சோகம்!
பன்றி இதயமாற்று சிகிச்சை செய்த நபருக்கு நேர்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை
விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பான மருத்துவ ஆய்வுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. மனித உடலுக்கு ஏற்ப மரபணு மாற்றம் செய்யப்பட்ட விலங்குகளின் உறுப்புகள் மூலம் இந்த சவாலை மருத்துவர்கள் தீர்க்க முயன்றனர்.
முதலாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சையில், இவ்வாறு மரபணு மாற்ற பன்றி இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட போதும், வைரஸ் தொற்று காரணமாக 2 மாதங்கள் மட்டுமே பன்றி இதயத்தால் மனித உடலில் துடிக்க முடிந்தது.
அதனால் வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்துவ ஆய்வுகள் முழுமையடைந்ததில், தற்போது இரண்டாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
2வது சிகிச்சை
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்தில் 58 வயதாகும் முன்னாள் கடற்படை வீரரான லாரன்ஸ் ஃபாசெட் என்பவருக்கு கடந்த செப்ட் 20ம் தேதி 2வது அறுவை சிகிச்சை செய்தனர். இது வெற்றிகரமாக நடைபெற்று அவர் 40 நாட்கள் வரை நன்றாக இருந்துள்ளார்.
இது குறித்து மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் வெளியிட்ட அறிக்கையில், "லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, சீட்டுக்கட்டு விளையாடுவது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வந்தார்.
ஆரம்ப நாள்களில் அவர் உடல், மறுப்பிற்கான அறிகுறிகளைக் காட்டினாலும் இது வழக்கமான இதய மாற்று அறுவை சிகிச்சையிலும் நடக்கக் கூடியது தான். மருத்துவர்களின் முயற்சியால் அவர் அக்.30 வரை பிழைத்திருந்தார்" என்று தெரிவித்துள்ளனர்.