அங்கே அப்பாவி இனம் அழிகிறது.. தடுக்கமுடியவில்லை - ஐ.நா மனித உரிமை இயக்குநர் ராஜினாமா!
ஐ.நா மனித உரிமை இயக்குநர் இந்த போர் காரணமாக ராஜினாமா செய்துள்ளார்.
கமாண்டர் கொலை
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் நடந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் மத்தியப் பிரிவு கமாண்டர் இப்ரஹிம் பியாரியுடன் சேர்த்து நிறைய ஹமாஸ் தீவிரவாதிகளும் கொன்று வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.
தற்பொழுது, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு எக்ஸ் தளம் வாயிலாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ராஜினாமா
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கிரெய்க் மொக்கிபர் அக்டோபர் 28ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய அவர், "காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது. அங்கே அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுகின்றனர்.
இந்தத் தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகள் ஆதரித்து வருகின்றன. மோசமான தாக்குதலை அவை இணைந்து அரங்கேற்றுகின்றன. அதைத் தடுக்க முடியாத ஐ.நா.வில் இருந்து நான் விலகுகிறேன்" என்று கூறியுள்ளார்.