இயக்குனர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது - ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து
தமிழ் திரையுலகில் மாஸான இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவர் ‘பகல் நிலவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதனையடுத்து, ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘ராவணன்’ போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.
இவருக்கும் மராட்டிய மாநிலம், புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகின்றது.
இதனையடுத்து, இந்த வருடம், திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, இயக்குனர் மணிரத்னத்திற்கு வரும் இன்று இணைய வழியில் ‘பாரத் அஷ்மிதா’ விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து, அவருடைய ரசிகர்கள் மணிரத்தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.