இந்தியர்களுக்கு தீபாவளிப் பரிசு; தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை - கனவு நினைவாச்சு!
தாய்லாந்து, இந்தியர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து
தாய்லாந்து நாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் சுற்றுலா செல்கின்றனர். பெரும்பாலான இந்தியர்களின் கனவு சுற்றுலா தளமாக விளங்குகிறது.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சியாக,
விசா தள்ளுபடி
இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கான விசா தேவையை தாய்லாந்து அரசு தள்ளுபடி செய்துள்ளது. நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மே வரை விசா நடைமுறை நீக்கப்படுகிறது.
அதன்படி, விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2024 மார்ச் 31ஆம் தேதி வரை விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அரசும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.