உலகின் 2வது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை.. உயிர்போகும் தருணத்தில் இருந்த நபரை காப்பாற்றிய டாக்டர்கள்!

Heart Failure United States of America
By Vinothini Sep 24, 2023 06:04 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

சாவின் விளிம்பில் இருந்த நபரை பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அறுவை சிகிச்சை

விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பான மருத்துவ ஆய்வுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. மனித உடலுக்கு ஏற்ப மரபணு மாற்றம் செய்யப்பட்ட விலங்குகளின் உறுப்புகள் மூலம் இந்த சவாலை மருத்துவர்கள் தீர்க்க முயன்றனர்.

second-pig-heart-transplantation-in-america

முதலாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சையில், இவ்வாறு மரபணு மாற்ற பன்றி இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட போதும், வைரஸ் தொற்று காரணமாக 2 மாதங்கள் மட்டுமே பன்றி இதயத்தால் மனித உடலில் துடிக்க முடிந்தது.

அதனால் வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்துவ ஆய்வுகள் முழுமையடைந்ததில், தற்போது இரண்டாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.

2வது சிகிச்சை

இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்தில் 58 வயதாகும் முன்னாள் கடற்படை வீரரான லாரன்ஸ் ஃபாசெட் என்பவர் இதய செயலிழப்பு காரணமாக சாவின் விளிம்பில் இருந்தார். இவரது உடல் உபாதைகள் காரணமாக வழக்கமான இதய மாற்று அறுவை சிகிச்சை சரிவரவில்லை.

second-pig-heart-transplantation-in-america

எனவே கடந்தாண்டு பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அதே மேரிலாந்து மருத்துவர்கள் குழுவினர், இரண்டாவது அறுவை சிகிச்சையை இவரிடம் செய்திருக்கிறார்கள்.

அடுத்து வரும் சில வாரங்கள் லாரன்ஸ் ஃபாசெட்டுக்கு சவாலாக இருக்கலாம். தற்போது இயல்பாக மருத்துவர்களுடன் கைகுலுக்கி, ஜோக் அடித்து மகிழ்வுடன் இருக்கிறார்.