வருஷம் ஃபுல்லா மழைதான்; பிரேக்கே கிடையாது - அப்படி ஒரு நகரம் இருக்கு தெரியுமா?
தினம்தோறும் ஒரே நேரத்தில் மழை பொழியும் நகரம் குறித்து தெரியுமா?
மழை பொழிவு
ஒரு சில மாதங்கள் வெயில் அடித்தால் அடுத்த சில மாதங்கள் மழை பொழிவது தான் இயல்பு. வழக்கமும் கூட... ஆனால், ஒரு நகரத்தில் மட்டும் தினம்தோறும் ஒரே நேரத்தில் மழை பொழியுமாம்..
பிரேசிலின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்று பெலேம். இங்கு தினமும் மதியம் 2 மணிக்கு மேல் மழை பொழிய தொடங்கி விடுகிறது. 1616ல் நிறுவப்பட்ட பெலேம், மில்லியன் கணக்கான மக்களை கொண்ட ஒரு பெரிய நகரம்.
பெலேம்
இங்கு கண்ணை கவரும் கலைநயத்துடன் கூடிய ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு தொடர்ந்து பொழியும் மழை காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு நகரம் முழுவதும் தண்ணீர் தேங்குகிறது.
இந்த நகரத்தின் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகும், கலாச்சாரமும் விருந்தினர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதில் சிறந்து விளங்கி வருகிறது.