இந்தியாவில் வாழ மலிவான நகரம் இதுதான் - சென்னை லிஸ்ட்டில் எங்க இருக்கு தெரியுமா?
இந்தியாவில் வாழ்வதற்கேற்ற நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
காஸ்ட்லியான நகரம்
முன்னணி ப்ராபர்ட்டி ஆலோசகரான நைட் ஃபிராங்க் இந்தியா பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வாழ்வதற்கேற்ற மலிவான நகரம், அதிக காஸ்ட்லியான நகரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மிகவும் விலையுயர்ந்த வீட்டு சந்தை மும்பை எனத் தெரியவந்துள்ளது. வீட்டுக் கடன் EMI மற்றும் வருமான விகிதம் 55% ஆகும். அடுத்ததாக, 31% EMI வருமான விகிதத்துடன் ஹைதராபாத் 2-வது மிகவும் விலையுயர்ந்த நகரமாக உள்ளது.
மலிவான நகரம்
3வது இடத்தில், டெல்லி இருக்கிறது. இங்கு வருமானத்தில் 30% வீட்டுக் கடன் EMI-களுக்காக செலவிட வேண்டும். ஈஎம்ஐ-க்கு வருமானத்தில் 28% செலவிடும் தமிழகத்தின் சென்னை நான்காம் இடத்தில் உள்ளது.
அடுத்ததாக, 5வது இடத்தில், மகாராஷ்டிராவில் உள்ள புனே உள்ளது. இங்கு ஒரு சராசரி குடும்பம் தங்கள் வருமானத்தில் 26% வீட்டுக் கடன் EMI-களில் செலுத்த வேண்டும்.
இதில், குஜராத்தில் உள்ள அகமதாபாத் தான் வாழ மிகவும் மலிவான இந்திய நகரம் எனத் தெரியவந்துள்ளது. அங்கு ஒரு சராசரி குடும்பம் தனது வருமானத்தில் 23% வீட்டுக் கடன் EMI-களுக்கு செலுத்த வேண்டும். கடந்த 1 வருடத்தில், இந்த நகரங்களில் வாழ்வது விலை உயர்ந்ததாகிவிட்டது.