பாசமா, அப்படினா என்ன? நட்பாக இல்லாத நபர்கள் நிறைந்த 2 இந்திய நகரங்கள் - எதெல்லாம் தெரியுமா?
நட்பு பாராட்டாத நபர்களால் நிறைந்த 2 இந்திய நகரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தரவரிசை பட்டியல்
சர்வதேச அளவில் எந்த நகரம் மிகவும் நட்பாக பழகும் மக்களை கொண்டுள்ளது, எந்த நகரம் மிகவும் நட்பு பாராட்டாத நபர்களால் நிரம்பியுள்ளது என்பது குறித்த Community Spirit Index தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில், எந்த ஒரு இந்திய நகரமும் நட்பு பட்டியலில் இடம் பெறவில்லை. நட்பாக இல்லாத நகரங்களின் பட்டியலில் முதல் 6 இடத்தில் 2 முக்கிய இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த நட்பு நகரங்களாக டொராண்டோ மற்றும் சிட்னி ஆகியவை லிஸ்ட்டில் டாப்பில் உள்ளன.
இந்திய தலைநகரான புதுடெல்லி மற்றும் மும்பை ஆகிய 2 நகரங்கள் மிகவும் நட்பற்ற மக்கள் வசிக்கும் உலக நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நட்புறவு கொண்ட டாப் 10 நகரங்கள்
டொராண்டோ, சிட்னி, எடின்பர்க், மான்செஸ்டர், நியூயார்க், மொண்ட்ரியால், மெல்போர்ன், சான் பிரான்சிஸ்கோ, டப்ளின், கோபன்ஹேகன் டாப் 10ல் இடம்பிடித்துள்ளன.
நட்புறவு இல்லாத டாப் 6 நகரங்கள்
கானா, மொராக்கோ, மும்பை, கோலாலம்பூர், ரியோ டி ஜெனிரோ, டெல்லி டாப் 6ல் இடம்பெற்றுள்ளன.