பேராபத்து: மூழ்கி வரும் நியூயார்க் நகரம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நியூயார்க் நகரம் மூழ்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்று என்பது நாம் அறிந்ததே. இரவை பகலாக்கும் வண்ண விளக்குகள், வானளாவிய கட்டிடங்கள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்கள் என மிகவும் பெயர் போன நகரம்.
இங்கு மக்கள் தொகை 84 லட்சம் என்ற அளவில் இருக்கும் நிலையில், அங்குள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களின் எடை 1.7 டிரில்லியன் பவுண்ட் ஆகும். இதனால் அந்நகரம் ஆண்டுக்கு 1 முதல் 2 மிமீ அளவு மூழ்கி வருவதாக கூறப்படுகிறது.
மூழ்கும் அபாயம்
அதன் தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் LOWER MANHATTAN, BROOKLYN, QUEENS போன்ற பகுதிகள் அதிவேகமாக மூழ்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கடலோர வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதில் உலகளவில் நியூயார்க் நகரம், 3வது இடத்தில் இருக்கும் நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் மற்ற பகுதிகளை காட்டிலும் 3 முதல் 4 மடங்கு கடல் மட்ட உயர்வு பிரச்சனையை அதிகம் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் வானளாவிய கட்டிடத்தின் அழுத்தம் காரணமாக ஏற்படும் இந்த மாற்றம் அந்நகரவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.