ரூ.36,000 கோடியுடன் எஸ்கேப் ஆன பெண்; யார் இவர் - என்ன செய்தார் தெரியுமா?
சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயுடன் பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
ஒன் காயின்
பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் ருஜா இக்னாடோவ. இந்த பெண் ஒன் காயின் (Onecoin) என்ற கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்ததாகவும், மெக்கின்சியில் படித்ததாகவும் அறிமுகம் செய்துக்கொண்டார். இதனால், சில மாதங்களிலேயே ஒன் காயின் மீது முதலீடுகள் குவியத் தொடங்கின.
அதன்படி, ஒன் காயின் கிரிப்டோகரன்சியில் ஒரு கட்டத்தில் 3 மில்லியன் முதலீட்டாளர் முதலீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. திடீரென முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனையடுத்து அவர் மீது புகார்கள் குவியத் தொடங்கியது.
மாயமான பெண்
அதன் அடிப்படையில், அமெரிக்க புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் ருஜா இக்னாடோவாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கிடையில், கிரீஸ் சென்றிருந்த ருஜா திடீரென மாயமானார். அடுத்த சில நாட்களில் அவரது பெற்றோரும் மாயமாகினர்.
அதன்பின் விசாரணையில், சுமார் 4 பில்லியன் டாலர் பணத்துடன் அவர் மாயமானது தெரியவந்தது. அவருடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவித்த நிலையில், Europol அமைப்பும் most wanted listல் ருஜா இக்னாடோவா பெயரை சேர்த்து,
சுமார் 5,000 யூரோவை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.
ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் அவர் பயணிப்பதாகவும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது தோற்றத்தை மாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கும் FBI, தீவிரமாக அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.