Paytmல் பிட்காயின் மூலம் பணம் செலுத்தும் வசதி - தலைமை நிதி அதிகாரி தகவல்
இந்திய அரசு கிரிப்டோவிற்கான அங்கீகாரம் அளிக்குமானால் பிட்காயின் மூலம் பணம் செலுத்தும் வசதியை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக Paytm நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மதுர் தியோரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகத்திற்கு எந்தவொரு தடையும் இன்று வரை இல்லை. ஆனால் அதற்கான சட்ட விதிகள் மற்றும் வரையறைகளும் வரையறுக்கப்படவில்லை.
அதற்கான பணிகளில் இந்திய நிதி அமைச்சகமும் செயல்பட்டு வருகிறது. அதனை விரைந்து முடித்தால் Paytm நிறுவனம் அதன் பயனாளர்கள் பிட்காயின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்யலாம் எனக் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, நிதி அமைச்சகம் உருவாக்கியுள்ள குழு கிரிப்டோ வர்த்தகத்தின் மூலம் கிடைக்கு வருமானத்திற்கு வரிகள் விதிப்பதைக் குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா தன் முதல் டிஜிட்டல் கரன்சியை வரும் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.