ரூ.125 கோடி மதிப்பாம்.. கின்னஸில் இடம்பெற்ற உலகின் விலை உயர்ந்த உள்ளாடை!
கின்னஸில் இடம்பெற்ற உலகின் விலை உயர்ந்த உள்ளாடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேன்டஸி ப்ரா
பிரபல உள்ளாடை நிறுவனம் விக்டோரியாஸ் சீக்ரெட். அதன் கவர்ச்சியான பேஷன் ஷோக்களுக்கு நீண்ட காலமாக அறியப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த ஃபேன்டஸி ப்ரா.
அதிக விலை மதிப்புள்ள வைரக்கற்களை இணைத்து இந்த உள்ளாடை உருவாக்கப்பட்டுள்ளது. 1990 களில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உள்ளாடைகள் சிக்கலான கைவினைத்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஃபேன்டஸி ப்ராவும் அதிக விலை மதிப்பு கொண்டது.
கின்னஸ் சாதனை
முதல் பேண்டஸி ப்ரா 1996 இல் அறிமுகமானது. இது தொடர்பான விளம்பரங்களில் பிரபல மாடலும், ஜெர்மன் நடிகையுமான கிளாடியா ஷிஃபர் அணிந்திருந்தார். $1 மில்லியன் மதிப்புள்ள இந்த உள்ளாடை 100 காரட் வைரங்களைக் கொண்டிருந்தது.
2000 ஆம் ஆண்டில் பிரபல மாடல் கிசெல் பாண்ட்சென் அணிந்திருந்தார்.
இந்த உள்ளாடையின் மதிப்பு $15 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 125 கோடி. இதில், 1,300 காரட் வைரம் மற்றும் மாணிக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இதுவரை தயாரிக்கப்பட்ட மிக விலையுயர்ந்த உள்ளாடைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இந்த ப்ரா இடம்பிடித்துள்ளது.